பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் 100 மீட்டர்(டி12) ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 24 வயதான நடப்பு உலக சாம்பியனான சிம்ரன் அவரது வழிகாட்டியான அபய் சிங்குடன், அரையிறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்த ஜெர்மனியின் கேத்ரின் முல்லர் ரோட்கார்ட்க்கு அடுத்தபடியாக இறுதிச்சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் 100 மீட்டர் இலக்கை 12.17 வினாடிகளில் கடந்து அசத்தினார்.
சிம்ரன், முல்லர்-ரோட்கார்ட் தவிர, உக்ரைனின் ஒக்ஸானா போடூர்ச்சுக் மற்றும் தற்போதைய பாராலிம்பிக் சாம்பியனும், உலக சாதனையாளருமான கியூபாவின் ஒமாரா டுராண்ட் ஆகியோர் இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கத்துக்காக போட்டியிட உள்ளனர். பார்வைக் குறைபாட்டுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த சிம்ரன், அரையிறுதியில் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் இப்போது இன்றிரவு திட்டமிடப்பட்ட நான்கு ஸ்பிரிண்டர் இறுதிப் போட்டியில் போட்டியிடுவார்.
Read more ; ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?