திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள பழனி அக்ஷயா அகாடமி என்ற பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்ற எட்டு வயது சிறுவன் அபினவ் என்பவர். இந்த சிறுவன் கால்குலேட்டரையே ஓரம் கட்டும் அளவிற்கு கணிதத்தில் சாதனை படைத்து வருகிறான்.
ஓரிலக்க மற்றும் ஈரிலக்க எண்களின் தொடர்ச்சியாக கூட்டுதல், பெருக்குதல், மடங்குகள், வர்க்கம், கண எண்கள், பிதாகரஸ் எண்களுக்கிடையே இருக்கும் தொடர்பை காணுதல் என கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் அச்சிறுவன் கணிதத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கான சிறப்பாக விடைகளை கூறி அசத்தி வருகிறார்.
இதனையடுத்து ஒரு நபரின் வயதை மட்டும் கூறினால் அதை நொடி கணக்கில் கூறும் அளவிற்கு சிறந்த திறமை கொண்டுள்ளார்.அபினவின் திறமையை கண்டு இந்தியாஸ் வேர்ல்டு ரெக்கார்டில் இருந்து எங்கஸ்ட் ஹுமன் கால்குலேட்டர் (Youngest Human Calculater) என்ற சான்றினை வழங்கியுள்ளது.
இந்த சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே கணிதத்தில் வியக்க வைக்கும் திறமை பெற்றுள்ளதை கண்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நண்பர்கள் வெகுவாக பாராட்டினர். இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சரான மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து தன்னுடைய கணித திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெற வேண்டும் என்பது தான் தனது ஆசை என்று அபிநவ் தெரிவித்துள்ளார்.