fbpx

மறைமுகமாக உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை!… லிட்டருக்கு ரூ.5 உயர்வு!… பொதுமக்கள் அதிருப்தி!

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் என்ற அளவில் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆவின் பால் நிறுவன நிர்வாகம் தமிழக அரசு துறையின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது. ஆவின் பால் விலை திடீர் உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பால் விலை நூதனமாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து பால் விற்பனை முகவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி ஆவின் பால் மூன்று நிலைகளில் வெவ்வேறு விதமான விலை நிர்ணயத்தின் படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கால் லிட்டர், அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நிலைப்படுத்தப்பட்ட கால் லிட்டர் பாக்கெட் விலை ரூ.11.25 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு லிட்டர் பால் 45 ரூபாய் ஆகும். ஆனால் இதே நிலைப்படுத்தப்பட்ட 200 மில்லி பால் பாக்கெட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ. 10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒரு லிட்டர் பால் ரூபாய் 50 ஆகும். இதன் மூலம் ஆவின் நிர்வாகம் மறைமுகமாக பாலின் விலையை உயர்த்தியுள்ளது தெரிய வருகிறது.

தமிழக அரசு ஆவின் பாலின் விலையை உயர்த்த அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் விற்பனையை அதிகரித்து நிர்வாகத்தின் செலவுகள் மற்றும் கொள்முதல் விலை உயர்வுகளை சமாளிக்க அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாகவே ஒரே தரத்திலான பாலின் விலை இரண்டு வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த மறைமுக ஆவின் பால் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

வரிசை கட்டி நிற்கும் லாரி, பேருந்துகள்..!! 144 தடை உத்தரவு..!! பொதுமக்கள் கடும் அவதி..!!

Tue Sep 26 , 2023
பெங்களூருவில் இன்று பந்த் தொடங்கியுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்பினர் கோரிக்கை வைத்து பந்த் நடத்தி வருகின்றனர். மண்டியா மாவட்டத்தில் பந்த் நடந்து முடிந்துள்ளது. இன்று பெங்களூரில் பந்த் தொடங்கி உள்ளது. […]

You May Like