fbpx

Public Exam: வரும் ஜன: 3-ம் தேதி வரை…! 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.

தட்கல் திட்டம்

தனித்தேர்வர்கள் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஜனவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் அரசுத்தேர்வுகள் இயக்கத்தின் இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் கூடுதலாக மேல்நிலை வகுப்பிற்கு ரூ.1,000 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுத்துறையின் இ-சேவை மையங்கள் குறித்த விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் வீடு! - அவர் அணிந்திருந்த அங்கியை வழிபடும் மக்கள்

Thu Dec 22 , 2022
இயேசு கிறிஸ்து மனித அவதாரத்தில் உலகிற்கு வந்த கடவுளின் மகன் என்றும் இசுரேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை பைபிள் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்னர் படைவீரர்கள் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் என எடுத்துக் கொண்டார்கள் […]

You May Like