fbpx

ரெடியா…? 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 28-ம் தேதி முதல்…! ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட்…!

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வரும் 28-ம் தேதி முதல் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வரும் 28-ம் தேதி பிற்பகல் முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் உள்ள பாடம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு, இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை!... தடயங்கள் மூலம் உறுதியான ஆச்சரியம்!... தொல்லியல் துறையினர் கண்டுபிடிப்பு!

Sat Feb 25 , 2023
இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த ஒருவரின் உடலை ஆய்வு செய்தபோது, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில்,15ஆம் நூற்றாண்டில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சகோதரர்களில் ஒருவரது மண்டை ஓடு, அதன் கீழே இருக்கும் […]

You May Like