fbpx

Index: சிமெண்ட், உரம் உள்ளிட்ட தொழில் குறியீடு 5.2 சதவீதம் அதிகரிப்பு…!

எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு மார்ச் 2023 குறியீட்டுடன் ஒப்பிடும்போது 2024 மார்ச்சில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி மார்ச் 2024-ல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை ஐசிஐ அளவிடுகிறது. எட்டு முக்கிய தொழில்கள் தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் சேர்க்கப்பட்ட பொருட்களின் எடையில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

2023 டிசம்பருக்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 5.0 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் ஐசிஐ-ன் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

சிமெண்ட் உற்பத்தி, இந்தக் காலக்கட்டத்தில் 10.6 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி 8.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.0 சதவீதமும், மின்சார உற்பத்தி 8.0 சதவீதமும் அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 1.3 சதவீதம் குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்துள்ளது. எஃகு உற்பத்தி 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

Vignesh

Next Post

கட்டுப்பாடுகள் அகற்றம்!... கனடா மாணவர்களுக்கு பணிநேரம் குறைவு!

Wed May 1 , 2024
Canada: கனடாவில் கல்வி கற்கும் மாணவர்களின் வேலை நேரத்தை வாரத்திற்கு 40 மணிநேரத்தில் இருந்து 20 மணி நேரமாக குறைத்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது. கோவிட் காலகட்டத்தில் கனடாவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க, மாணவர்கள் கூடுதலாக சில மணி நேரம் பணி செய்ய அனுமதிக்கப்பட்டது. அதாவது, […]

You May Like