fbpx

பத்ம பூஷன் விருதுபெற்ற இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது வழக்குப்பதிவு!. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெங்களூரு போலீஸ் அதிரடி!

Girish Gopalakrishnan: இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதில், நான் இந்திய அறிவியல் மையத்தின் நீடித்த தொழில்நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன் கடந்த 2014-ம் ஆண்டு தான் பணியில் இருந்தபோது, இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன் என்மீது போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். அப்போது சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

இதே குற்றச்சாட்டை, கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வேஸ்வரா, ஹரி கேவிஎஸ், தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஷி, சட்டோபாத்யாயா கே, பிரதீப் டி சவுகர் மற்றும் மனோகரன் ஆகியோர் மீது துர்க்ப்பா அளித்துள்ளார். இது தொடர்பாக இந்திய அறிவியல் மையம் தரப்பிலோ அல்லது அதன் முன்னாள் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தரப்பில் இருந்தோ எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற் கூறப்படுகிறது.

இன்ஃபோசிஸின் இணை நிறுவனர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் , 2011 முதல் 2014 வரை இன்ஃபோசிஸின் துணைத் தலைவராகவும், 2007 முதல் 2011 வரை இன்ஃபோசிஸின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார். ஜனவரி 2011 இல், மத்திய அரசு கோபாலகிருஷ்ணனுக்கு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவர்.

Readmore: “அப்பா என்னை மன்னித்துவிடு”; ‘மனைவிக்கு என் உயிர்தான் வேண்டுமாம்’!. கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!. கர்நாடகாவில் பகீர்!

English Summary

Infosys co-founder Girish Gopalakrishnan booked! Bengaluru police take action under Prevention of Atrocities Act!

Kokila

Next Post

Today Gold Rate : அப்பாடா.. ஒருவழியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Tue Jan 28 , 2025
In Chennai today, the price of gold jewelry has decreased by Rs. 240 per sovereign, and a sovereign of gold is being sold for Rs. 60,080.

You May Like