fbpx

நோட்…! அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் ஆய்வு கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும்…!

தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன‌.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் அல்லது தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.02.2024. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்களே இன்றே கடைசி..!! 6,000 ரூபாயை மிஸ் பண்ணிடாதீங்க..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Wed Jan 3 , 2024
நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரணத் தொகை பெற இன்று (ஜனவரி 3) தான் கடைசி நாள் என்பதால், டோக்கன் பெற்றவர்கள் இன்று நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். நெல்லை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைகளின் அடிப்படையில், அதிக பாதிப்புள்ள பகுதிகளுக்கு 6,000 ரூபாயும், மற்ற பகுதிகளுக்கு 1,000 ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதற்காக 220 […]

You May Like