fbpx

அதிர்ச்சி!!! துடிதுடித்து உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்…

ஈரேட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் 27 வயதான ராகுல். ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் மகன் இவர். கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி என்பவரின் மகளான தேவிகாஸ்ரீ என்பவரை இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். டான்ஸ்மாஸ்டரான இவர், தனது காமெடியான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவர், ராகுல்டிக்கி என்ற யூட்யூப்சேனலை நடத்தி வரும் நிலையில், ஏழை எளியோருக்கு எதாவது உதவிகள் செய்து அதனை வீடியோவாக எடுத்து தனது யூடியுப் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது மனைவியை அழைத்து வருவதற்காக, நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் சாலை தடுப்பில் மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட இவரது பைக், சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், அவர் தலைக்கவசம் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ராகுலின் சடலத்தைக் கைப்பற்றி, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: “வேற ஒருத்தன லவ் பண்ணா, என்கூட உல்லாசமா இருக்க மாட்டியா?” மாமாவால், கழிவறையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..

English Summary

insta celebrity ragul was dead

Next Post

“அப்போ, காசுக்காகத்தான் என்கூட பழகுனியா?” ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்..

Fri Jan 17 , 2025
woman was killed by her lover

You May Like