பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தொழிலதிபரை ஹனி ட்ராப் முறையில் மிரட்டி பணம் பறிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜஸ்னீத் கவுர் என்ற ராஜ்வீர் கவுர் என்பவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவர் குர்பீர் சிங் என்ற தொழிலதிபரை தொடர்புகொண்டு ஜஸ்னீத் கவுர் அவருடன் நெருக்கமாக பேசியுள்ளார். பின்னர் அதனை காட்டி அவரிடம் பணம் தருமாறு மிரட்டி வந்துள்ளார். குர்பீர் சிங்கிடம் ரூ.2 கோடி தராவிட்டால் இந்த உரையாடலை பொதுவெளியில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி முதற்கட்டமாக ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.
அதோடு தனக்கு நெருக்கமான குண்டர்கள் மூலமும் குர்பீர் சிங்கை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார் அந்த பெண். இதனால், குர்பீர் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, பணம் தருவதாக குர்பீர் சிங் மூலம் ஜஸ்னீத் கவுரை வரவழைத்த போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவரோடு இருந்த சோகன்பால் என்பவரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஈடுபட ஜஸ்னீத் கவுரின் கூட்டாளியும், முக்கிய அரசிய பிரமுகருமான லக்கி சந்து என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து BMW கார் மற்றும் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.