fbpx

வந்துவிட்டது இன்ஸ்டன்ட் பீர் தூள்!… தண்ணீரை சேர்த்தால் போதும் பீராக மாறிவிடும்!… ஜெர்மன் மதுபான ஆலை கண்டுபிடிப்பு!

உலகின் முதல் பீர் தூளை Klosterbrauerei Neuzelle எனும் ஜெர்மன் மதுபான ஆலை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கிழக்கு ஜெர்மனியை தளமாக கொண்ட Klosterbrauerei Neuzelle எனும் மதுபான ஆலை சாதாரண தண்ணீரை நிமிடங்களில் பீராக மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளது. அதாவது இன்ஸ்டண்ட் காபி தூள் போல இன்ஸ்டண்ட் பீர் தூளை தயாரித்துள்ளது. இதன்மூலம், பீர் ஏற்றுமதிக்கான பயணத்தில் ஏற்படும் அதிக கார்பன் வெளியீட்டை குறைக்க முடியும் என நம்புவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு கிளாஸில் பீர் பொடியைப் போட்டு, தண்ணீர் சேர்த்து கலக்கினால் போதும் உண்மையான பீரை போலவே இந்த தண்ணீர் பீர் ரெடி ஆகிவிடும்.

தூள் பீர் அதன் வளர்ச்சியின் கடைசி கட்டத்தில் உள்ளது. இப்போதைக்கு இது ஆல்கஹால் இல்லாதது என்பது குறிப்பித்தக்கது. ஆனால் இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த ஆண்டின் (2023) இறுதிக்குள் சந்தைக்கு தயாராகிவிடும் என்று நம்பப்படுகிறது.இந்த பீர் பவுடர் புழக்கத்திற்கு வந்தால், தண்ணீர், போத்தல்கள் போன்ற பல பொருட்கள் தேவைப்படாமல் போகலாம், மேலும் எடை குறையும் என்பதால் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும். இது, ஜெர்மனிக்கு மட்டும் CO2 உமிழ்வில் 3 முதல் 5 சதவீதத்தை சேமிக்க முடியும் என்று அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

Kokila

Next Post

நோய்களை விரட்டும் கற்பூரவள்ளி செடி உங்கள் வீட்டில் இருக்கா?... கற்பூரவள்ளி சூப் தயாரிக்க ரெசிபி இதோ!

Thu Mar 23 , 2023
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடிய கற்பூரவள்ளி இலையின் நன்மைகளும் மருத்துவ குணங்களை தெரிந்துகொள்வோம் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி.கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, […]

You May Like