fbpx

சாயம் போன தேசியக் கொடியை ஏற்றி அவமதிப்பு…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நாள்தோறும் காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் தேசியக் கொடியை ஏற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஒருமாத காலமாக அலுவலகத்தில் ஏற்றப்படும் தேசிய கொடி சாயம் போன நிலையில் இருந்தும் ஏற்றி பறக்க விட்டு வருகின்றனர்.இந்த தேசியக் கொடி ஜனவரி 26 குடியரசு தின விழா அன்று புதிதாக மாற்றப்பட்ட நிலையில், அதன் சாயம் வெளுத்துப்போன பின்பும் கொடியை மாற்றாமல் அதே கொடியை ஏற்றி வருகின்றனர். இதுபோல் சாயம் போன தேசியக் கொடியை பறக்க அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக தேசிய கொடியை மாற்றி பறக்க விட்டால் இதுபோன்று சாயம் போன நிலையில் உள்ள தேசியக் கொடி பறக்க விடுவதை தவிர்க்கலாம். ஆனால், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தேசியக் கொடியின் நிலையை கண்டு கொள்ளாமல் நாள்தோறும் பணிக்கு வருவதும் போவதுமாக இருப்பது வேதனை அளிப்பதோடு தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாகும் என சமூக ஆர்வலர் சதீஸ் வேதனை தெரிவித்தார். சாயம் போன நிலையில் தேசியக் கொடி ஏற்றப்படுவது குறித்து நகராட்சி ஆணையாளர் கணேசனிடம் கேட்டதற்கு உடனடியாக மாற்றம் செய்து புதிய தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Maha

Next Post

ரேஷன் அட்டைதாரர்களே..!! அங்கீகாரச் சான்று பற்றி தெரியுமா..? தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்..!!

Sat Jun 10 , 2023
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ரேஷன் அரிசி கடத்தல் விஸ்வரூபமெடுத்துள்ளது. எனவேதான், ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் […]

You May Like