fbpx

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு அட்டை..! காப்பகத்திற்கு ரூ.40 கோடி..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு அட்டையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு அட்டை..! காப்பகத்திற்கு ரூ.40 கோடி..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பின்னர் அவர் பேசுகையில், ”228 ஆண்டுகள் கடந்த ஒரு பழமையான அமைப்பு கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம். கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் புதிய கட்டிடம் மற்றும் புதிய ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்த 40 கோடி ரூபாய் இந்த மனநல காப்பகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக, ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா சுப்பிரமணியன். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Chella

Next Post

’இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்..’? - சீமான் கேள்வி

Fri Aug 5 , 2022
இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தற்கொலைக்கு முன் தம்பி எழுதிய […]
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..!! ’இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்’..!! சீமான்

You May Like