fbpx

கூகுளில் வடகொரியா அதிபர் குறித்து தேடிய உளவுத்துறை அதிகாரி..!! மரண தண்டனை விதித்த சம்பவம்..!!

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு கூறுவதை அந்த நாட்டு மக்கள் எந்த கேள்வியுமின்றி அப்படியே செய்ய வேண்டும். மீறினால் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். மேலும், அந்த நாட்டில் குடிமக்கள் வெளி உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுக்க இணைய அணுகலைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. பொதுமக்கள் இணையதளம் பயன்படுத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ உயர் அதிகாரிகளும், உளவுத்துறையினரும் மட்டுமே இணையதளத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் அவர்கள் இணையத்தில் என்னென்ன தேடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க அரசு குழு ஒன்றை நியமித்திருக்கிறது. அந்தக் குழு 10 துறைகளுக்கு இணைய அணுகலை வழங்கியிருக்கிறது. மேலும், முகவர்கள் தங்கள் தேடல், சொல், பதிவு ஆகியவற்றை முடக்கி, இணையத்தில் வட கொரியா விரும்பும் அளவுக்கு மட்டுமே தேட அனுமதிக்கிறது. இந்நிலையில், உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் அதிபர் கிங் ஜான் உன் குறித்து சாதாரணமாகக் கூகுளில் தேடிப் பார்த்திருக்கிறார்.

இந்த தகவலை இணையக்கட்டுப்பாட்டு அறை அதிபர் கிம் ஜாங்-உன்-இடம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறது. உடனே அவர் “என்னைப் பற்றி எப்படி இணையத்தில் தேடலாம்” என கொந்தளித்து, உடனடியாக அந்த உளவுத்துறை அதிகாரிக்கு துப்பாக்கிப் படையினரால் மரண தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து வட கொரியாவில் உள்ள மனித உரிமைகளுக்கான குழுவின் இயக்குனர் கிரெக் ஸ்கார்லடோய் (Greg Scarlatoiu),” அதிபர் கிம் ஜாங்-உன் ஆட்சியில் தகவல் பரிமாற்றம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

கிம் ஆட்சியின் மிகவும் நம்பகமான முகவர்கள் கூட இப்போது வெளி உலகத்திலிருந்து தகவல்களை அணுக முயற்சிக்கின்றனர். கிம் குடும்ப ஆட்சியில் பெரும் வற்புறுத்தல், தண்டனை, கண்காணிப்பு மற்றும் தகவல் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தை பலப்படுத்துகிறது. வெளியுலகிலிருந்து நாட்டிற்குள் வரும் மிகக் குறைந்த தகவல்களும், அதிகாரத்தின் மீதான பிடிக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Chella

Next Post

அம்மாவுக்காக அட்ஜஸ்ட்மென்ட்..!! காதலனுடன் லிவ்வின்..!! வாழ்க்கையே போச்சு..!! ஐட்டம் நடிகை தற்கொலை..!!

Thu Mar 16 , 2023
சினிமா ஆசையுடன் திரையுலகிற்கு வரும் நடிகைகளுக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பல அட்ஜஸ்ட்மென்ட் சம்பவங்களுக்கு பிறகு ஒரு சிலருக்கு முன்னணி நடிகையாகும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அதிலும் பெற்ற மகளையே பணத்திற்காக படுக்கைக்கு அனுப்பும் தாய்க்குலங்களும் இருக்கிறார்கள். இது பிடிக்கவில்லை என்றாலும் அம்மாவின் வற்புறுத்தலால் பலரின் ஆசைக்கு இணங்கும் நடிகைகளும் உண்டு. இதுகுறித்து பல திரைப்படங்களில் நாம் பார்த்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு நடிகை இது போன்ற கஷ்டத்தை அனுபவித்து […]

You May Like