தீவிரமடைந்த பருமழை..! வேகமாக உயரும் அமராவதி அணையின் நீர்மட்டம்..!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த 2 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 946 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு, தலையாறு, மறையூர், கோவில் கடவு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மறையூர் கோவில்கடவு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு உடுமலை-மூணாறு சாலையில் உள்ள, தூவானம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை! | Amaravathi dam  to release excess water | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil  News | Tamil News Online | Tamilnadu News

அதேபோல், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதிகளில் பெய்யும் மழையால் தேனாற்றிலும், வால்பாறை மலையின் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சின்னாறு மற்றும் வனப்பகுதியிலுள்ள காட்டாறுகள் வழியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 600 கனஅடி வரை மட்டுமே இருந்தது. தற்போது 1,383 கன அடியாக அதிகரித்து சராசரி நீர் வரத்தாக 2,334 கனஅடி வரை உயர்ந்துள்ளது. அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 69 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அடுத்த சீசன் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Chella

Next Post

ஸ்தம்பிக்கும் இலங்கை..! பிரதமர் ரணில் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைப்பு..!

Sun Jul 10 , 2022
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபட்சவை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு மேற்கொண்ட தவறான பொருளாதாரக் கொள்கை, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்தது. மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட […]
ஸ்தம்பிக்கும் இலங்கை..! பிரதமர் ரணில் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைப்பு..!

You May Like