கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 4 நாட்களுக்கு பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நேற்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 7ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.