அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 8.6 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் முன்பு கடன் பெற்றவர்கள் வங்கியை அணுகி தங்களுடைய வட்டி விகிதத்தை குறைத்துக் கொள்ள முடியும் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே MSME கடன் வட்டி விகிதங்களை 8.4 சதவீதத்தில் குறைத்துள்ளது.