கோச்சடையான் அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்காக ரூ.6.2 கோடி பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்ததாக தொடரப்பட்டவழக்கில் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது…
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது படம் தயாரிப்பதற்காக மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் அபிர்சந்த் நஹார் என்பவரிடம் ரூ.6.2 கோடி பெற்றுள்ளார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் 6.2 கோடி ரூபாயை தரவில்லை என இருவர் மீதும் 2015ம் ஆண்டு பெங்களூரு 6வது முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அல்சூர் கேட் போலீசார் லதாரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. பின்னர் இது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இந்நிலையில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று லதாரஜினிகாந்த் தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் சில பிரிவுகளை நீக்கி விட்டு பிற பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தலாம் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லதாரஜினிகாந்த் மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு எதிராக விசாரணை நடத்த இடைக்கால உத்தரவு பிறப்பத்து நீதிபதி உத்தரவிட்டார்.