fbpx

தொடர் பதற்றம்…! சந்திரபாபு நாயுடுவிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை…! 144 தடை உத்தரவு அமல்…

விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், நேற்று அதிகாலை நந்தியாலாவில் முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், தற்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கைது செய்தனர்.

திறன் மேம்பாட்டு கழகத்தில் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் சில நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி, அதன் மூலம் 10 சதவீதம் லஞ்சம் பெற்ற வழக்கில் ரு. 371 கோடி ஊழல் நடந்துள்ளது. அவ்வழக்கில் அவரை 37-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளாதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக மாநிலம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆந்திர மாநிலம் உய்யூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 7 மண்டலங்களில் வரும் 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தூக்கத்திலேயே பறிபோன உயிர்கள்..! மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது..!

Sun Sep 10 , 2023
மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆகி உயர்ந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது கடந்த வெள்ளிகிழமை இரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி) வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ. நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமான மராகேஷுக்கு தென்மேற்கே 72 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவில் உள்ள மலைப் பகுதியில் 6.8 […]

You May Like