fbpx

ஐபிஎல்லில் மிரட்டலான ஆட்டம்!… திரும்ப வந்துட்டேனு சொல்லு!… ஆஸி.க்கு ஆப்பு வைக்க!… WTC பைனலில் ரஹானே!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், 17 மாதங்களுக்கு பிறகு ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடரை இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 9 அணிகள் பங்கேற்றன. தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜுன் மாதம் 7ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அணியை ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவித்த நிலையில், தற்போது இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 17 மாதங்களுக்குப் பிறகு ரஹானேவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக மிடில் ஆர்டர் வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றாக ரகானே மற்றும் ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்திய அணிக்காக முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக விளங்கிவந்த ரஹானே ஃபார்ம்-அவுட் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதைதொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரிக்கு பிறகு இந்திய அணிக்காக எந்தவொரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஹானே, அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். அதிரடியாக ரன் குவித்து வரும் அவரது மிரட்டலான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ரகானே மீண்டும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மோசமான பேட்டிங் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே. எல். ராகுல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான், இந்திய அணியில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியல்: ரோகித்சர்மா(கேப்டன்), விராட்கோலி, சுப்மன்கில், கே.எல்.ராகுல்,கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ்யாதவ், ஜெய்தேவ் உனத்கட், புஜாரா, ரஹானே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்:கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், கவாஜா, லபுசக்னே, லயன், மிட்ஷெல் மார்ஷ், மர்பி, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

Kokila

Next Post

தல பேசினாலே போதும்!... தோனியின் கேப்டன்சியில் ஆடினால் எதையும் சாதிக்கலாம்!... அஜிங்க்யா ரஹானே பேச்சு!

Wed Apr 26 , 2023
தல தோனியின் கேப்டன்சியில் ஆடும்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று சென்னை அணி வீரர் அஜிங்க்யா ரஹானே கூறியுள்ளார். ஐபிஎல் 16வது சீசன் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சீசன் தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதனை வழிநடத்தும் தலைவரான தோனியை பற்றிதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை நிகழ்த்திவருகிறது. இதுமட்டுமின்றி தோனிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு […]

You May Like