fbpx

ஜிமெயில், மேப்ஸ் மற்றும் யூடியூப்பில் கூகுள் சாட்பாட் பார்ட் அறிமுகம்!… எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை, ஜிமெயில், மேப்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்கு அறிமுகம் செய்துள்ளது.

ஓபன் ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட்டின் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய போட்டி அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் கூகுள் நிறுவனத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான பார்ட் என்னும் சாட்பாட்டை அறிமுகம் செய்தது. பாரட் சேவையை ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் மேப், யூ டியூப் உள்ளிட்ட இணைய தளங்களிலும் பயன்படுத்தும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது ஜிமெயில் கணக்குகளில் உட்பொதிக்கப்பட்ட தங்களது தகவல்களை அணுகுவதற்கு சாட்பாட்டை பயன்படுத்தலாம், கூகுள் வரைப்படத்தில் இருந்து திசைகளை பெறவும் மற்றும் யூடியூப்பில் பயனுள்ள வீடியோக்களை கண்டறியவும் பயன்படும். மேலும் கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து தகவல்களை பிரித்தெடுப்பதற்கும் சாட்பாட் உதவும்.

Kokila

Next Post

மது பிரியர்களுக்கு ஷாக்...! இன்று காலை 8 முதல் 6 மணி வரை மது மற்றும் சாராய கடைகளை மூட உத்தரவு...!

Wed Sep 20 , 2023
புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் முன்னிட்டு இன்று மதுபானம் மற்றும் சாராய கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சதுர்த்தி விழா வழிபாடுகள் நடைபெற்றது. இதுதவிர வீடுகளிலும் மக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர். சிறிய அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். ஓரிரு நாட்கள் கழித்து […]

You May Like