fbpx

மாதம் ரூ.1000 செலுத்தினால் 7.5 சதவீதம் வட்டி…! மகளிருக்கு மத்திய அரசின் அசத்தலான திட்டம்…! முழு விவரம் இதோ…

மகளிர் கெளரவ சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் தொடங்கிய மகளிர் கெளரவ திட்டத்தின் சேமிப்பு சான்றிதழ்கள் அஞ்சலகங்களில் தற்போது கிடைக்கிறது. நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 31.03.2025 வரை அமலில் இருக்கும்.

பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கில் சேர்க்கப்படும். கணக்கை தொடங்க குறைந்தபட்சத்தொகை ரூ.1000, அதிகபட்சத் தொகை ரூ.2 லட்சம். ஒரே தவணையில் இந்த டெபாசிட் தொகையை கட்ட வேண்டும்.

கணக்கு தொடங்கியதில் இருந்து 2 ஆண்டு காலத்தில் அது முதிர்வடையும். கணக்கை 6 மாதத்திற்கு பின்னர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளவும் அனுமதி உண்டு. அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று இந்தக் கணக்கை தொடங்கலாம். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in. என்ற இணையதளத்தை அணுகலாம்.

Vignesh

Next Post

2023 நீட் தேர்வு ஜுன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுமா...? மத்திய அரசு மாணவர்கள் கடிதம்...!

Wed Apr 19 , 2023
நீட் தேர்வை ஜுன் மாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இளங்கலை நீட் 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15 அன்று முடிவடைந்த நிலையில், தேர்வுக்கு தயாராக குறைந்த நேரம் இருப்பதாகக் கூறி தேர்வை ஒத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு பலர் கோரிக்கை வைத்தனர். மேலும் சில மாணவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஜூன் மாதத்தில் தேர்வை நடத்த வேண்டும் […]

You May Like