பொருளாதார வீழ்ச்சி மாத சம்பளம் வாங்கக்கூடிய நபர்களை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் லேஆஃப்களில் இருந்து மீண்டு வருவதற்கும் திட்டமிட்ட முதலீடுகளை செய்வது உதவ கூடும். வழக்கமான சிறந்த ரிட்டன்களை பெறுவதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் வருடாந்திர திட்டங்களில் முதலீடு செய்யலாம். பல ரியல் எஸ்டேட் முதலீட்டு திட்டங்கள் மாத அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை வருமானத்தை ஈட்டி தரக்கூடியதாக உள்ளன.
பெரிய நிறுவனங்களில் லேஆஃபை ஈடுகட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கினாலும், பல நிறுவனங்களில் எந்த ஒரு இழப்பீடு தொகையும் கொடுக்கப்பதில்லை. எனவே, நாம் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கும்போதே, எதிர்காலத்திற்கு ஓரளவுக்கு நம்மால் முடிந்த முதலீட்டை செய்து வைப்பது எதிர்பாராத சூழ்நிலைகளில் நம்மை பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக வைப்பதற்கு உதவும்.
ஃபிக்சட் டெபாசிட்கள் (FDs) :
மிகவும் பாதுகாப்பான ரிட்டன்களை பெற்று தரக்கூடிய பொதுவான முதலீட்டு ஆப்ஷன்களில் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை மெச்சூரிட்டி காலம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்கள் உள்ளன. எனவே, மாத வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கேற்றவாறு மெச்சூரிட்டி காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்டு :
டெப்ட் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது ஃபிக்சட் டெபாசிட்களை காட்டிலும் அதிக ரிட்டன்களை பெற்று தரக்கூடும். இந்த முதலீடு நிதி அபாயங்களுக்கு உட்பட்டது. உங்களது முதலீடுகளுக்கான ரிட்டன்கள் கட்டாயமாக கிடைக்கும் என்பதற்கான கேரன்டி கிடையாது. ஆனால், நீங்கள் ரிஸ்க் எடுப்பதற்கு தயாராக இருந்தால், நிபுணரின் ஆலோசனையின் பெயரில் முதலீடு செய்யலாம்.
பங்குச்சந்தை :
தொடர்ச்சியான ரிட்டன்களைப் பெறுவதற்கு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது உதவ கூடும். இதன் மூலம் வரக்கூடிய வருமானமும் ஃபிக்சட் டெபாசிட்களில் இருந்து பெறக்கூடிய வருமானத்தை காட்டிலும் அதிகம். எனினும் பங்குகளின் மதிப்பு ஏறி இறங்குவதன் காரணமாக, பங்குசந்தையும் அதிக அபாயங்களுக்கு உட்பட்டது.
வருடாந்திர முதலீடு (Annuity Investment) :
நிலையான அதே நேரத்தில் தொடர்ச்சியான வருமானத்தை மாதா மாதம் பெற நினைப்பவர்களுக்கு இந்த முதலீடு ஆப்ஷன் சிறந்ததாக இருக்கும். இதன் மூலமாக சிறந்த பலன்களைப் பெற ஒருவர் நம்பகமான இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி ஆண்டுக்கு ஒரு முறை பெரிய தொகையை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் வருமானத்தை வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம்.
ரியல் எஸ்டேட் :
ரியல் எஸ்டேட் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது அதிக ரிட்டன்களை பெற்று தரக்கூடிய சிறந்த வாய்ப்பாக அமையும். நிலம் அல்லது பில்டிங் போன்ற சொத்துக்களை வாங்கி, அதனுடைய விலை அதிகரித்த பிறகு லாபத்திற்கு அதனை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம். மாத வருமானம் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை வருமானம் பெற்று தரக்கூடிய பல ரியல் ஸ்டேட் முதலீட்டு திட்டங்கள் உள்ளன.