ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆகவே சென்னை அணி முதலில் களம் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது சென்னை அணி.
சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் அடித்து 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதே போல டேவன் கான்வே 29 பந்துகளை சந்தித்து 47 ரன்களை சேர்த்தார். சிவம் டுபே, அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் 27 ரன்கள் சேர்த்தனர். 8வது விக்கெட் களமிறங்கிய கேப்டன் தோனி தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார். இதனைத் தொடர்ந்து, தோனி எதிர்கொண்ட 3வது பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் மூலமாக 5000 ரன்களை அடித்த 7வது வீரர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்திருக்கிறார்.
அதன் பிறகு 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியில் தொடக்க ஆட்டக்காரரான கெயில் மேயர்ஸ் 22 பந்துகளை சந்தித்து 2️ சிக்ஸர், 8 பவுண்டரி உட்பட 53 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். முதல் விக்கெட்டுக்கு அவரும் கே எல் ராகுலும் சேர்ந்து 79 ரகளை சேர்த்தனர்.
அதன் பிறகு நிக்கோலஸ் பூரன் (32), ஆயுஷ் பதோனி(23), ஸ்டோய்னிஸ் (21), கேஎல் ராகுல் (20) உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் நடந்தனர் இறுதியில் லக்னம் அணி 205 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலமாக 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி லக்னோ அணியை வெற்றி பெற்றது. அதோடு நடப்பு தொடரில் தன்னுடைய முதல் வெற்றியை சென்னை அணி பதிவு செய்தது.