fbpx

IPL 2024: சென்னை – பெங்களூரு தொடக்க ஆட்டம்!… நாளைமுதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!

IPL டி20 தொடரின் 17வது சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 18) தொடங்குகிறது.

இந்தியாவில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வரும் 22ம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வரையில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்த நிலையில், எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணையானது நாளையோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களிலோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். (மார்ச் 18) நாளை காலை 9.30 மணி முதல் டிக்கெட்கள் PAYTM அல்லது www.insider.in என்ற இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும் (ஒருவருக்கு 2 டிக்கெட்கள் மட்டுமே).

சிஎஸ்கே இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு பரிசாக, ஆட்டத்தை பார்ப்பதற்கான டிக்கெட்கள் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் ஒன்றின் விலை ரூ1700 முதல் ரூ7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Readmore: WPL 2024 Final: கோப்பையை வெல்லப்போவது யார்?… டெல்லி – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

Kokila

Next Post

M.K.Stalin: இன்று காலை 9.40 மணிக்கு மும்பை செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்...!

Sun Mar 17 , 2024
ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மும்பை செல்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை இன்று மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் நிறைவடைகிறது. இன்று மாலை மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி […]

You May Like