இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
10 அணிகள் மோதும் 16-வது ஐபிஎல் தொடர் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மற்றும் அகமதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனியின் இடதுகாலின் மூட்டுப்பகுதியில் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தோனி இன்றைய போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்திருக்கிறது.
தோனி சென்னை அணியை வழிநடத்தவில்லை எனில் அவருக்கு பதில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விக்கெட் கீப்பராக நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தோனி விளையாடுவது குறித்து அணி நிர்வாகம்தான் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த முறை தோனிக்கு பதில் ஜடேஜா கேப்டனாக இருந்த நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் கடந்த சீசனில் சென்னை அணி மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.