ஐபிஎல் பைனலில் கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு நான் வீசிய பந்து தவறான பந்து. நான் இன்னும் அதனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் இன்னும் தூங்க முடியவில்லை என்று குஜராத் வீரர் மோகித் ஷர்மா வேதனை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த் குஜராத் அணி 20 ஒவர்களில் 214 ரன்கள் குவித்தது. பிறகு சென்னை அணி களமிறங்கியதும் மழைபெய்த காரணத்தால் டக்வர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனவே 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. பரபரப்பாக போய்கொண்டிருந்த இந்த போட்டியின் கடைசி ஓவரை மோஹித் சர்மா தான் வீசினார். 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. பிறகு ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார் இதன் மூலம் சென்னை அணி வெற்றிபெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றது.
இந்த நிலையில் போட்டியில் தோல்வியடைந்து குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா ” ரவீந்திர ஜடேஜாவுக்கு நான் வீசிய பந்து தவறான பந்து. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது சாதாரணமான ஒன்று இல்லை. நான் இன்னும் அதனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் இன்னும் தூங்க முடியவில்லை. கடைசி பந்தை நான் யார்க்கர்-ஆக வீச முயற்சித்தேன். துரதிர்ஷ்டவசமாக, அது நான் திட்டமிட்டபடி நடக்கவில்லை. நான் யார்க்கர் வீச முயற்சி செய்த அந்த பந்து ஃபுல் டாஸாக மாறியது அதனை ஜடேஜா ஃபைன் லெக் மூலம் பவுண்டரி எல்லைக்கு அடித்து அணியை வெற்றிபெற செய்தார்” என கூறியுள்ளார்.