fbpx

IPL தல 200!… சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிப்பு!…

ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே கேப்டனாக களமிறங்கியதையடுத்து எம் எஸ் தோனிக்கு தல 200 என்ற நினைவு பரிசை வழங்கி அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் கௌரவித்தார்.

கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் அறிமுகமானது. அன்றுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். தோத்தாலும் ஜெயிச்சாலும் நான் சிஎஸ்கே ரசிகன் டா என்ற அளவுக்கு இன்றுவரை சென்னை வீரர்கள் மற்றும் கேப்டன் தோனிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்தநிலையில், ஐபிஎல் 16வது சீசனின் 17வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதன்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனி விளையாடிய 200-வது போட்டியாகும். இதில் கடைசிவரை போராடிய சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தோனிக்கு 200 ஆவது போட்டிக்கான நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், சென்னை அணியின் உரிமையாளருமான என் சீனிவாசன், தோனிக்கு நினைவுப் பரிசு கேடயத்தை வழங்கி கௌரவித்துள்ளார். ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக தோனி 4482 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு வீரராக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்களை கடந்துள்ளார். இதுவரையில் 9 முறை ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

குழந்தைகளுக்கு பண மழை பொழியும் தென்கொரியா!... மக்கள் தொகையை அதிகரிக்க சூப்பர் திட்டம்!

Fri Apr 14 , 2023
மக்கள் தொகை மற்றும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகளை தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. ஆசியாவில் மிகக்குறைவான மக்கள் தொகை கொண்ட நாடாக தென்கொரியா உள்ளது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டில், அந்த நாட்டில் ஒரு பெண்ணின் சராசரி குழந்தை எண்ணிக்கையானது, 0.78 ஆக இருந்தது. இது, அதற்கு முந்தைய 2021-ம் ஆண்டின் விகிதமான 0.81 என்பதைவிட குறைவாகும். பிறப்பு விகிதம் குறைந்து வருவதே […]

You May Like