fbpx

CSK கேப்டன் தோனி தொடர்ந்த வழக்கு.! தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை.! ஹை கோர்ட் அதிரடி தீர்ப்பு.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவருக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனர் குருநாத் மெய்யப்பன் சம்பந்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தோனியின் மீது அவதூறு சுமத்தியது தொடர்பாக ஜீ டிவி மற்றும் அந்த வழக்கை விசாரித்த சம்பத்குமார் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார் தோனி.

இது தொடர்பாக ஜீ டிவி உட்பட நிறுவனங்கள் அறிக்கையின் மூலம் பதில் அளித்திருந்த நிலையில் சம்பத்குமார் மேற்கொண்டு தன் மீது அவதூறு சுமத்துவது கோர்ட்டை அவமதிக்கும் நடவடிக்கை என தோனி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரிக்கு இது தொடர்பாக அப்பீல் செய்வதற்கு நீதிபதிகள் 30 நாள் அவகாசம் கொடுத்துள்ளனர்.

Next Post

ஹிந்து எப்படி அமெரிக்க அதிபராகலாம்.? - அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமியின் நச் பதில்.!

Fri Dec 15 , 2023
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. தற்போது அந்த நாட்டில் ஜனநாயக கட்சியைச் சார்ந்த ஜோ பைடன் அதிபராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா ஐக்கிய நாடுகளை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அங்கு இரண்டு கட்சிகள் மட்டுமே அரசியலில் போட்டியிடுகின்றன. அவற்றில் […]

You May Like