Netanyahu: போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தாக்குதலின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒளிந்து கொள்ள ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலத்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கி விட்டது. இந்த போருக்கு நடுவே தான் இஸ்ரேல் – லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையேயான மோதல் என்பது தொடங்கியது. தற்போது இந்த மோதல் என்பது இஸ்ரேல் – ஈரான் மோதலாக உருவாகி உள்ளது. ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரூல்லாவை இஸ்ரேல் வான்வெளி தாக்குதலில் கொன்றது.
இதனால் பொங்கி எழுந்துள்ள ஈரான் செவ்வாய் கிழமை இரவு அதிரடியாக 180 முதல் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கி ஏவி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலளித்த நெதன்யாகு, செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரான் ஒரு ‘பெரிய தவறு’ செய்துவிட்டது. “ஈரான் இன்றிரவு ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டது, இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார். இருநாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஈரான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் ஒளிந்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகும் ஓடுவது போல் இருக்கிறது. இருப்பினும், இந்த வீடியோ 2021 எடுக்கப்பட்டதாகவும், இதன் அசல் வீடியோவை 2021 இல் பத்திரிகையாளர் முகமது மகட்லி பகிர்ந்துள்ளார். அதில், இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசெட்டின் தாழ்வாரங்கள் வழியாக பெஞ்சமின் நெதன்யாகு விரைந்து செல்வதைக் காட்டுகிறது.
Readmore: ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்!. இந்த பரிசோதனைகள் கட்டாயம்!. அறிகுறிகள் இதோ!