fbpx

இஸ்ரேலை ஈரான் எந்த நேரத்திலும் தாக்கலாம்..!! அதிகரிக்கும் போர் பதற்றம்..!! விமான சேவை, ஜிபிஎஸ் முடக்கம்..!!

இஸ்ரேலை ஈரான் எந்த நேரத்திலும் தாக்கலாம் என்பதால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக துடைத்தெறிய வேண்டும் என இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா, கடந்த ஜூலை 31ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஈரான் ஆதரவுடன் செயல்படும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் புவாட் ஷுகர் ஜூலை 30ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைக்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். புவாட் ஷுகர் படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலின் விமான சேவை நிறுவனமான ‘எல் அல்’ நேற்று சில விமான சேவைகளை ரத்து செய்தது. பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலில் ஜிபிஎஸ் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

Read More : திருமண வரன் தேடும் பெண்களே உஷார்..!! மொத்தம் 49 பெண்கள்..!! வரதட்சணையாக சொகுசு கார், பைக்..!!

English Summary

War tensions are rising in the Middle East as Iran could attack Israel at any time.

Chella

Next Post

’அவள் எல்லாம் வெறும் பிசிறு தான்’..!! ’வளர விடக் கூடாது’..!! காளியம்மாள் குறித்து சீமான் பரபரப்பு பேச்சு..!!

Mon Aug 5 , 2024
Seeman explained the audios released about Naam Tamilar Party member Kaliyamma speaking indecently.

You May Like