fbpx

இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் பதற்றம்: மோதலை குறைக்க இந்தியா அழைப்பு..!

ஈரான் இஸ்ரேல் போர் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போரினால்,  30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.

இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அச்சம் ஏற்பட்டதால் மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை நாட்டு மக்களுக்கு விடுத்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஈரான் ஏவியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையே முழு அளவிலான போர் எந்த நிமிடமும் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இஸ்ரேல்- ஈரான் மோதல் விவகாரம் தொடர்பாக இந்தியா தனது கருத்தை கூறியுள்ளது, இந்திய வெளியுறவுத்துறை இது தொடர்பாக கூறியிருப்பதாவது, “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்கு திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளது.

Next Post

இதற்கு மட்டும் தட்டுப்பாடு இருக்க கூடாது...! மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு...!

Sun Apr 14 , 2024
இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகளின் இருப்பை ஆன்லைன் மூலம் இருப்பை தெரிவிக்க வேண்டும். நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் 2024 ஏப்ரல் 15 முதல் ஆன்லைன் இருப்பு கண்காணிப்பை செயல்படுத்துவதற்கு முன்னதாக பருப்பு தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனைகளை நடத்தினார். பருப்பு வகைகள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் பல்வேறு விதிகளின்படி செயல்படுவது உறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்த தொழில் துறையினரிடமிருந்து பெறப்பட்ட […]

You May Like