நாளுக்கு நாள் ரயில்வேயின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்தவாறே உள்ளது. அதனாலையே புது புது வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஒருவரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கும் மாற்றும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதை பிறருக்கு மாற்றுவதானாலும், தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித் தரலாம். அந்த பயணக் குழுவின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ள முடியும். இதற்கெல்லாம் கூடுதல் கட்டணம் இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள் ;
இதற்கு பெயர் மாற்ற கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டுமே இப்படி பெயர் மாற்ற கோரிக்கை ஏற்கப்படும். வேறொருவருக்கு இப்படி டிக்கெட்டை மாற்ற முடியுமே தவிர, வேறு தேதிக்கு டிக்கெட்டை மாற்றி பயணிக்க, ஐஆர்சிடிசி இணையதளத்தில் வசதி இல்லை.
Read more ; மண்டையை பிளக்கும் வெயில்..!! செப்.25-க்கு பிறகு விடிவு காலம்..!! கொட்டப்போகும் பேய் மழை..!!