fbpx

வாரிசு அமைச்சருடன் இர்பானுக்கு நெருக்கம்..!! வானத்துக்கும் பூமிக்கும் குதித்தீர்களே..!! இப்போ என்ன ஆச்சு..? கடுப்பான எடப்பாடி..!!

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2021ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மருத்துவத் துறையில் தொடர்ந்து நடக்கும் பல விரும்பத் தகாத நிகழ்வுகளை நான் அடிக்கடி இந்த அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்டி வருகிறேன். அவைகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், எனக்கு முரண்பாடான பதில்களை அளிப்பதிலேயே அமைச்சர் மா. சுப்பிரமணியம் குறியாக இருக்கிறார்.

சட்டவிரோதமாக செயல்பட்டு, ‘குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூடியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குகிறார். இது என்ன கொலைக் குற்றமா? என பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்கிறார். ஏற்கனவே இந்த யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் சாதனைத் துறையாக விளங்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை, ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில் சர்ச்சைக்குரிய துறையாக மாறி, நோயாளிகளின் உயிருடன் விளையாடி வருகிறது. தவறிழைத்தவர்கள் சாமான்ய மக்களாக இருந்தால் அவர்களுக்கு சட்டத்தை தீவிரமாக கடைபிடிப்பதும், உச்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தால் சட்டத்தை காற்றில் பறக்கவிடுவதுமாக செயல்படுகிறார்.

மக்களைக் காக்கும் மருத்துவத் துறையை சீரழித்து, முதலமைச்சரின் குடும்பத்திற்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அமைச்சர்களாக செயல்படுவார்கள் என்று எழுதப்படாத விதி ஒன்றை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி செயல்படுவது சர்வாதிகாரத்தின் உச்சம். தமிழக மக்கள் பொறுமைசாலிகள் மட்டுமல்ல – திறமைசாலிகள். நேரம் வரும் போது இந்த அராஜக ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடிக்கப்போவது திண்ணம்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More :பட்டப்பகலில் பரபரப்பு..!! நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..!! உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை..!!

Chella

Next Post

கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் ரூ.1,20,940..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

Wed Nov 20 , 2024
An employment notification has been issued to fill vacant posts at the Central Bank of India.

You May Like