fbpx

அண்டிப் பழம் கேள்விப்பட்டு இருக்கீங்களா.? ஆரஞ்ச் பழத்தை விட இதில் நன்மைகள் இருக்கா.!

முந்திரி நட்ஸ் வகைகளை சார்ந்த ஒன்றாகும். இவற்றின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நல்ல கொழுப்பு, புரோட்டின் மற்றும் உடலுக்கு சக்தியை தரக்கூடிய பல மினரல்களை கொண்டிருக்கிறது. முந்திரியை பற்றிய அறிந்த அளவிற்கு பலருக்கும் முந்திரி பழங்களை பற்றி தெரியாது. இவை அண்டி பழம் என்றும் கொல்லம் பழம் என்றும் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. துவர்ப்பு சுவையுடைய முந்திரிப் பழங்களை உண்ணலாமா.? மற்றும் அந்தப் பழங்களில் இருக்கும் நன்மை தீமைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முந்திரி பழங்கள் பொதுவாக துவர்ப்பு சுவையுடையதாக இருக்கும். இந்தப் பழங்களில் இருக்கக்கூடிய டானின் என்ற அமிலம் தொண்டையில் கரகரப்பு ஏற்படுத்தி தொண்டை வலி இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் முந்திரி பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனினும் இந்த பழத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடிய அதிக அளவிலான சத்துக்கள் இருக்கிறது .

ஆரஞ்சு பழங்களை விட முந்திரி பழத்தில் அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்து இருக்கிறது. இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கிறது. முந்திரி பழத்தில் புரோட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. இவற்றை சாப்பிடுவதால் செரிமானம் சீராவதோடு நோய் தொற்று பிரச்சனைகளிலிருந்தும் உடல் பாதுகாக்கப்படுகிறது. டானின் தொண்டைக்கு கரகரப்பு ஏற்படுத்துவதாக இருந்தாலும் இந்த அமிலம் ரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்டாகவும் பயன்படுகிறது.

Next Post

அட இது புதுசா இருக்கே.! உங்க நாக்கு கலர் வச்சு அது எந்த பாதிப்பின் அறிகுறி என்று கண்டுப்பிடிக்க டாக்டர்ஸ் அட்வைஸ்.!

Fri Dec 15 , 2023
நம் உடலில் சுவையை அறிவதற்கு முக்கியமான உறுப்பாக இருப்பது நாக்கு. இவை நமக்கு உணவின் சுவையை உணர்த்துவதோடு பேசுவதற்கும் முக்கிய உறுப்பாக பயன்படுகிறது. நம் உடலில் எலும்புகளே இல்லாத உறுப்பு என்றால் அது நாக்கு தான். நமது நாக்கு என்ன நிறத்தில் இருக்கிறது என்பதை வைத்தே அதன் மூலம் என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம் இன்று மருத்துவர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர். நாக்கின் நிறம் மற்றும் தன்மை ஆகியவையும் நோய்களை […]

You May Like