சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அல்லது எஸ்சிஓ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக உள்பெஸ்கிஸ்தானில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடைசியாக காணப்பட்டதார்.. எனினும் அவர், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவமான பிஎல்ஏவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது… எனினும், இந்த விவகாரம் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
சமீபத்தில் ஷி ஜின்பிங் சமர்கண்டில் இருந்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கட்சியின் இராணுவப் பொறுப்பில் இருந்து அவரை நீக்கியதாகக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ புதிய வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும்: ஷி ஜிங்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா? அவர் சமீபத்தில் சமர்கண்டில் இருந்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கட்சியின் இராணுவப் பொறுப்பில் இருந்து ஜிங்பிங்கை நீக்கியதாகக் கருதப்படுகிறது. பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது. இதுபோன்ற வதந்தி பரவுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்..
சீன அதிபர் வீட்டு காவலில் உள்ளதாகவும், சீனாவின் புதிய அதிபராக லீ கியாமிங் பதவியேற்றுள்ளதாக கூறப்படும் சில தகவல்களூம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன..
ஏன் இந்த வதந்தி பரவுகிறது..? இந்த வாரம், இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் நான்கு அதிகாரிகள் சீனாவில் ஆயுள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது, கம்யூனிஸ்ட் கட்சி சீனா முழுவதும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது, மேலும் அந்த 6 பேரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் எதிர்ப்பாளர்கள் என்று நம்பப்படுகிறது. எனவே ஜின்பிங்கின் எதிர்ப்பாளர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதாகவும் கூறப்படுகிறது..
சீன அதிபர் ஜி ஜின்பிங் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் சமீபத்தில் முடிவடைந்த எஸ்சிஓ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள கடைசியாக காணப்பட்டார். எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..