fbpx

’குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு திருமணமா..? அவரே வெளியிட்ட பதிவு வைரல்..!!

’சோஷியல் மீடியாவைத் திறந்தாலே எல்லோருக்கும் திருமணம், நிச்சயதார்த்தம் என்பதை பார்க்க முடிகிறது. நானும் அப்போது திருமணம் செய்து கொள்ளும் கட்டத்தில் இருக்கிறேனா?’ என ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி பதிவிட்டிருக்கிறார்.

தற்போது நடிகர், நடிகைகளுக்கு திருமணம், நிச்சயதார்த்தம் என்பது போன்ற செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த சந்தோஷமான தருணங்களைப் பார்த்த பாடகி, நடிகை சிவாங்கி தன்னுடைய திருமணம் ஆசையையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது அவருடைய பதிவில், “சோஷியல் மீடியாவை திறந்தாலே யாருக்காவது திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தைப் பிறக்கப் போகிறது என எதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. என் நண்பர்களுடைய பதிவும் அப்படித்தான் இருக்கிறது. அப்போது நானும் அந்த கட்டத்திற்கு வந்து விட்டேனா?” எனக் கேட்டுள்ளார்.

சிவாங்கியின் இந்தப் பதிவைப் பார்த்த பலரும் சிவாங்கிக்குத் திருமண ஆசை வந்துவிட்டது எனக் கூறி ‘சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க!’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் திருமணம் உறுதியானதைத்தான் இப்படி மறைமுகமாகச் சொல்கிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More : Rain | கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளு குளு நியூஸை சொன்ன வானிலை மையம்..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!

Chella

Next Post

ரூ.11 கோடி செலுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ்... காங்கிரசை தொடர்ந்து I.T. அதிரடி!

Fri Mar 29 , 2024
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி வரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் […]

You May Like