fbpx

RCB வெற்றிக்கு தோனி காரணமா? – தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் அதற்கு காரணம் தோனி அடித்த சிக்ஸர்தான் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முன்னதாக கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டூ பிளெஸ்சிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய, சென்னையின் கேப்டன் ருத்ராஜ் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின்னர் ரச்சின் ரவீந்திரா 61 ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் தோனி, ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக போராடினர். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இந்த வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், 3 வாரங்களுக்கு முன்பு 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்த போது இது தான் கடைசி போட்டி என்று முடிவு செய்தேன். விராட் கோலி உள்பட 26 பேரிடமும் குட் பை சொல்லிவிட்டேன். ஆனால், அதன் பிறகு நடைபெற்ற 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, ஆர்சிபி அணி எப்படிப்பட்ட அணி என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும்.

இந்தப் போட்டியில் நடந்த முக்கியமான விஷயம் என்னவென்றால், தோனி அடித்த சிக்ஸர் மைதானத்திற்கு வெளியில் சென்றது. இதன் காரணமாக நியூ பால் கிடைத்தது. அந்து பந்து வீசுவதற்கு சிறப்பாக இருந்தது. யாஷ் தயாள் சிறப்பாக பந்து வீசினார். சில நல்ல மந்திரங்களை பின்பற்றியிருக்கிறார்.

ஆர்சிபு சிறப்பான அணி. கடைசியாக தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் போன்று இல்லாமல் பார்ட்டி, மகிழ்ச்சி, அரட்டை என்று கொண்டாடுங்கள். இது தான் சிறப்பு வாய்ந்த தருணம். 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டியிலும் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆகையால் மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளார்.

‘பெங்களூரு தோசை, மும்பை பாவ் பாஜி…’ இந்தியாவில் பிடித்த உணவு இதுதான்! – கூகுள் CEO சுந்தர் பிச்சை ஓபன் டாக்

Next Post

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு! - 2ஆவது இடத்திற்கு செல்லுமா சன்ரைசர்ஸ்?

Sun May 19 , 2024
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 69ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி […]

You May Like