’எதுக்கு இப்படி பண்றீங்க’..!! ’கஷ்டமா இருக்கு’..!! வாழ்வுச் சான்றால் தவிக்கும் ஓய்வூதியதாரர்கள்..!!

வாழ்வுச் சான்று சமா்ப்பிக்க பின்பற்றப்பட்டு வரும் புதிய நடைமுறையால் ஓய்வூதியதாரா்கள் தவிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 6 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் தங்களது உடல் நலனை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், உயிா் வாழ்வுச் சான்றை சமா்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் போன்ற வழிமுறைகள் இருந்தாலும், பல ஓய்வூதியதாரா்கள் கருவூலத் துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று வாழ்வுச் சான்றுகளை அளித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

சான்றை அளிக்க பழைய நடைமுறைப்படி ஏப்ரல் முதல் ஜூன் வரை அவகாசம் அளிக்கப்படும். அந்த காலகட்டத்தில் சான்றை அளிக்கத் தவறினால், ஜூலையில் கூடுதல் அவகாசம் தரப்படும். இந்த நிலையை மாற்றி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தாங்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றாா்களோ அந்த மாதத்தில்தான் ஒவ்வோா் ஆண்டும் வாழ்வுச் சான்றினை சமா்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை கருவூலம் மற்றும் கணக்குத் துறை பிறப்பித்தது.

இந்தப் புதிய நடைமுறை, இப்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று, நல்ல ஞாபக சக்தியுடன் இருக்கும் ஓய்வூதியதாரா்களுக்கு சரியான வழிமுறையாக இருக்கும். ஆனால், தங்களைப் போன்ற ஓய்வூதியதாரா்களுக்கு எந்த மாதத்தில் வாழ்வுச் சான்றை அளிக்க வேண்டும் என்ற குழப்பம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவதாக 70 வயதைக் கடந்த ஓய்வூதியதாரா்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட மாதத்தில் வாழ்வுச் சான்றிதழை அளிக்காவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கருவூலத்துறையை சோ்ந்த அலுவலா்கள் கூறுகையில், பழைய நடைமுறைப்படி ஓய்வூதியதாரா்களிடமிருந்து வாழ்வுச் சான்றிதழை பெறும் பணி மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால், இப்போது ஆண்டு முழுவதும் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிற பணிகளை செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், எங்களது துறையைச் சோ்ந்தவா்களுக்கும் உரிய காலத்தில் பதவி உயா்வு பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை. 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிபவா்கள் சரியான முறையில் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை எனவும் புகாா் தெரிவிக்கின்றனா்.

ஓய்வூதியதாரா்களுக்கு மட்டுமல்லாது, அரசு ஊழியா்களுக்கும் கருவூலத் துறையின் மென்பொருள்களால் பிரச்சனை ஏற்படுவதாகக் கூறுகின்றனா். வருமான வரி பிடித்தம் செய்வதற்கான பிரிவு, கருவூலத் துறையின் மென்பொருளிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, மாதம் ரூ.5,000 என்ற அளவில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், இப்போது ரூ.20,000 செலுத்த வேண்டும் என்று மென்பொருளில் காட்டப்படுவதாக அரசு ஊழியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

வருமான வரிப் பிடித்தம் போக, மீதமுள்ள பணத்தை அடுத்த ஆண்டு பெற்றுக் கொள்ளலாம் என கருவூலத் துறை தெரிவிப்பதாகவும், மொத்தமாக அதிக அளவிலான தொகையை ஏன் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியா்கள் கேள்வி எழுப்புகின்றனா். தற்போது பள்ளிகள் திறக்கும் நேரம் என்பதால், கூடுதலான தொகையைச் செலுத்த கருவூலத் துறை ஏன் நிா்பந்திருக்கிறது என்பதும் அவா்களின் கேள்வியாக இருக்கிறது.

Read More : ஜூன் 6இல் பள்ளிகள் திறப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு..!!

English Summary

Pensioners are in trouble due to the new procedure being followed to submit proof of life.

Chella

Next Post

பட வாய்ப்புகள் இல்லை.. ஸ்கேட்ச் போட்டு கோடிகளை அள்ளும் நடிகை!

Mon May 27 , 2024
actress honey rose bussiness in lead

You May Like