எழும்பூர் மருத்துவமனையில் 100 குழந்தைகள் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் புளூ காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஏராளமான குழந்தைகள் வைரஸ் காய்ச்சாலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில் இதற்காக எழும்பூரில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் வார்டுகள் நிரம்பியது. இது தொடர்பாக எழும்பூரில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதி என்ற செய்தி வளம் வந்து கொண்டிருக்கின்றது.
’’ இது உண்மையல்ல, நிறைய குழந்தைகள் வருகின்றார்கள் என்பது உண்மை வார்டு நிரம்பியுள்ளது. மேலும் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. கால நிலை மாற்றத்தால் எப்போதும் வரும் காய்ச்சல்தான். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம்.’’ என மருத்துவமனை முதல்வர் எழிலரசி தெரிவித்துள்ளார்.