தற்போதைய இளம் தலைமுறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இருக்க விரும்புவதில்லை. அவர்களை பொறுத்தவரையில் எப்போதும் சுதந்திர பறவைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுடைய சுதந்திரத்திற்கு தடை விதிப்பது யாராக இருந்தாலும், அவர்களை தங்களுடைய மிகப்பெரிய எதிரியாகவே பார்க்க தொடங்கி விடுகிறார்கள்.
.அந்த விதத்தில், ஹைதராபாத் அருகே நடைபெற்ற ஒரு பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஆம்பூர் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசிராம் நகரில் ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது, நிகிதா என்ற பெண் அப்சல்கஞ்சில் இருக்கின்ற ஒரு கடையில் பழங்களை விற்பனை செய்யும் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 தினங்களாக அவர் வீட்டிற்கு தாமதமாக வந்ததன் காரணமாக, அந்த பெண்ணின் தந்தை ஜெகதீஷ், அந்த பெண்ணை கடுமையாக கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட நிகிதா ஆத்திரம் தலைக்கேறிய நிலையில், ஒரு கூர்மையான பொருள் ஒன்றால் தன்னுடைய தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார்.
அவருக்கு தொண்டையில் உண்டான கட்டாயம் காரணமாக, உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்தப்போக்கு அதிகரித்ததன் காரணமாக, அவர் உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது.உயிரிழந்தவரின் பெயர் ஜெகதீஷ் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், அவர் மகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜெகதீஷின் மகளான நிகிதா மீது இந்திய சட்டம் 302 இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தந்தையை மகள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.