திருவள்ளூர் மாவட்டத்தில் நயப்பாக்கம் காப்பு காடு உள்ளது. இங்கு சிலர் காகத்தை விஷம் வைத்துக் கொன்று சாலையோர பிரியாணி கடைகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பின்போது, திருப்பாக்கம் கிராமத்தில் உள்ள காப்பு காட்டில் ஒரு தம்பதி வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது இறந்த காகங்கள் இருந்தன.
இதையடுத்து தம்பதியை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர்கள் ரமேஷ் – பூச்சம்மா தம்பதி என்பது தெரியவந்தது. அதோடு அவர்கள் காகத்துக்கு விஷம் வைத்துக் கொன்றுள்ளனர். காகத்தை கொன்றது ஏன்? என்று கேட்டபோது அந்த தம்பதி, ”நாங்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களின் குடும்பத்தில் மொத்தம் 7 பேர் இருக்கிறோம். எங்களின் உணவு தேவைக்காக காகத்தை வேட்டையாடினோம்” என்று கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து 19 இறந்த காகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ”பிடிபட்ட தம்பதியை கைது செய்யவில்லை. அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. “வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் கீழ் காகங்கள் vermin ஆக கருதப்படுவதால், அவர்களை கைது செய்யவில்லை. அவர்கள் மீது அத்துமீறி நுழைந்து காகத்தை கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தின் உணவுக்காக காகத்தை லேசான விஷத்தன்மை கொண்ட பொருளை வைத்து கொன்றுள்ளனர்.
காகத்தை வேட்டையாடி சாலையோர பிரியாணி கடைகளுக்கு சிலர் விற்பனை செய்வதாகவும், அதோடு காகத்தின் இறைச்சி பிரியாணி உள்பட அசைவ உணவில் கலக்கப்படுவதாகவும் புகார் எழுந்த நிலையில், இந்த தம்பதி வனத்துறையிடம் சிக்கி உள்ளனர். ஆனாலும், வறுமை காரணமாக அவர்கள் காகத்தை உணவுக்காக வேட்டையாடி இருக்கலாம் என்று வனத்துறையினர் நம்புகின்றனர்.
Read More : வயிற்றில் குழந்தை..!! தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மூச்சுத்திணற வைத்து கொலை செய்த சித்தி..!!