fbpx

நம் வீட்டிற்கு இந்த பறவைகள் வந்தால் நல்ல சகுனமா..? கெட்டதா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

உலகில் அனைத்து உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டது என்றாலும், ஒவ்வொரு உயிரினத்திற்கு ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். இதில் சில உயிரினங்கள் நம் வீட்டிற்கு வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? என்பதை பார்ப்போம்.

காகம்

காகம் சனீஸ்வர பகவானின் வாகனம் என்பது அனைவரும் தெரியும். அமாவாசை தினங்களில் காகத்திற்கு சாப்பாடு வைத்த பிறகே, அனைவரும் சாப்பிட வேண்டும். ஆனால், தினமும் காகத்திற்கு சாப்பாடு வைத்தால், நாம் அறியாமல் செய்த பாவங்கள் கூட நம்மை விட்டு விலகி விடுமாம். ஆனால், காகம் வீட்டிற்குள் வந்தால் நல்லது இல்லை என்று கூறப்படுகிறது.

கழுகு:

வீட்டிற்குள் கருடன் வந்தால் நல்லது. ஆனால், கழு வரக்கூடாது. பொதுவாக கழுகுகள் உயரத்தில் பறக்கக் கூடியவை. பெரும்பாலும் வீட்டிற்குள் வராது என்றாலும், சில கிராம புறங்களில் பல வீடுகளில் கழுகு நுழையும். இது இந்து மத நம்பிக்கைப்படி நல்லது இல்லை. கழுகு வீட்டிற்குள் நுழையும் போது பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுமாம்.

வவ்வால்:

இந்து மத சாஸ்திரப்படி, வவ்வால்கள் வீட்டிற்குள் வரவே கூடாதாம். அப்படி வந்தால், அது அபச குணம் என்பார்கள். மேலும், வீட்டில் பண பிரச்சனைகள் ஏற்படுமாம். ரத்த காயத்தோடு வவ்வால் வீட்டில் வந்து விழுகிறது என்றால், ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று அர்த்தமாம்.

சிட்டுக்குருவி :

வீட்டுக்குள் சிட்டுக் குருவி வந்தால் அதனை விரட்ட வேண்டாம். ஏனென்றால், எப்போதுமே வீட்டிற்குள் சிட்டுக்குருவி வராது. அரிதாகவே சிட்டுக்குருவி வீட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. அப்படி சிட்டுக்குருவி வீட்டிற்குள் வந்தால் அதை விரட்ட வேண்டாம். அது அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல சகுனமாக கருதப்படுகிறது. சிட்டுக்குருவி துழையும் வீட்டினுள் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

புறா:

வீட்டிற்கு வருவதால் செல்வ வளம் மேலும் அதிகரிக்கும். புறாக்களுக்கு தானியம் போடுவது தண்ணீர் வைப்பது போன்றவற்றால் நமக்கு புண்ணியம் கிடைக்கும். புறா மகா லட்சுமியின் உருவமாக கருதப்படுகிறது. புறா வீட்டிற்குள் வந்தாலோ அல்லது கூடு கட்டினாலோ வீட்டில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. அதேபோல் பொன்வண்டு, குளவி, கிளி போன்றவை வீட்டிற்குள் வந்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.

ஆந்தை:

ஆந்தையின் தோற்றம் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால், ஆந்தை என்பது மகாலட்சுமியின் வாகனமாகும். வட மாநிலங்களில் அதிர்ஷ்ட லட்சுமி ஆந்தையை தான் தனது வாகனமாக கொண்டுள்ளார். எனவே, ஆந்தை வீட்டிற்குள் வரவில்லை என்றாலும் பால்கேனியிலோ அல்லது வீட்டிற்குள்ளே வந்துவிட்டால் நல்லது இல்லை. வீட்டில் வம்ச விருத்தியில் பிரச்சனை ஏற்படலாம்.

Read More : முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணம் இத்தனை நாட்களா..? என்ன காரணம்..?

English Summary

Is it a good omen if some creatures visit our house? Bad omen? Let’s see that.

Chella

Next Post

வருஷத்துல எல்லா நாளுமே இங்கு மழை தான்..!! விசித்திர நகரத்தின் பின்னணி என்ன?

Fri Aug 16 , 2024
Belen is the only city where it rains every day at the same time

You May Like