fbpx

கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுன..? அட்டகாசம் செய்த யானையை பிடித்த வனத்துறையினர்….

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, நாடுகாணி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி, 2 பேரை கொன்றதால் கடந்த மாதம் 8ஆம் தேதி PM2 மாக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பகாத்தில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆனால் அந்த யானை மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்துள்ளது. அதனை தடுத்து நிறுத்திய தமிழக வனத்துறையினர் கும்கி யானைகளின் துணையுடன் மற்றும் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

சில நாட்களுக்கு முன் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி நகரினுள் புகுந்து பேருந்தை விரட்டியும் நடைபாதையில் நடந்து சென்ற ஒருவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து மக்னா யானையை பிடிக்க வேண்டும் என பத்தேரி பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் போராட்டங்கள் நடத்தியதை அடுத்து PM2 மாக்னா யானையை பிடிக்க கேரளா வனத்துறை நேற்று முன்தினம் உத்தரவிட்ட நிலையில் இன்று காலை முட்டாகாடு என்ற இடத்தில்யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்டது.

இந்த யானையை முத்தங்காவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பரமாரிக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து பிடிக்கப்பட்ட யானையை வனத்துறையிர் லாரியில் ஏற்றி யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Kathir

Next Post

குட் நியூஸ்...! மாதம் தோறும் உதவித்தொகை...! வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து, 5 ஆண்டு முடிந்து இருக்க வேண்டும்...!

Tue Jan 10 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ படித்த வேலைவாய்ப்பற்ற ‘இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்துவகை மாற்றுத்திறனாளி‘இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ தற்பொழுது சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ பெறப்படுகின்றன. பத்தாம்‌ வகுப்பு (தோல்வி), பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ அதற்கும்‌ மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள்‌ […]

You May Like