fbpx

இளநீரை வெறும் வயிற்றில் அருந்தினால் ஆபத்தா?

இயற்கை நமக்கு கொடுத்துள்ள ஒரு அமிர்தம்தான் இளநீர். உடலில் சூடு ஏற்பட்டாலோ அல்லது வயிற்று, வாய்ப்புண் என அனைத்திற்கும் நாம் அதிகம் நாடி ஓடுவது இளநீரை தான். இவை 100% இயற்கையான சுத்தமான, உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத ஒரு அற்புதமான பானம் ஆகும்.

இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் நன்மை என்றும் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமலங்களுடன் சேர்ந்து வயிற்றுப் புண் ஏற்படும் என்றும் இரண்டு விதமான பார்வைகள் இளநீர் மீது உள்ளன. உண்மையிலேயே எதுதான் சரி என்பதை விரிவாக பார்க்கலாம்.

யார் யார் எல்லாம் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாம்? நம் உடலுக்கு கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். இவற்றை யார் வேண்டுமானாலும் பருகலாம். பொதுவாக சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் எடுத்துக்கொள்ளும். இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்.

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும். உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள lauric acid முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் பல நன்மைகளை நாம் பெறலாம்.

Read More: 14 வருடங்களுக்கு பிறகு வெளியான ரகசியம்! கார்த்தி – தமன்னா கார்த்தி காதலை உடைத்த இயக்குநர்!

English Summary

Is it dangerous to drink fresh water on an empty stomach?

Rupa

Next Post

தொண்டர்களே தயாராகுங்கள்!… 500 நாட்கள்தான் இருக்கு!… அண்ணாமலை அதிரடி!

Tue Apr 30 , 2024
Annamalai: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. […]

You May Like