fbpx

ஊழியர்களுக்கு குட்நியூஸ்..! வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை.. புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு..

நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான (WFH) புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது..

மத்திய வர்த்தக அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை ஒரு சிறப்பு பொருளாதார மண்டல பிரிவில் அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் (SEZs) நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கைக்கான ஏற்பாடுகளைச் செய்ய தொழில்துறையினரின் கோரிக்கையின் பேரில் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய விதியானது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை வழங்குகிறது.

மொத்த ஊழியர்களில் அதிகபட்சமாக 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைக்கு அனுமதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. அதிகபட்சமாக ஓராண்டு வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Maha

Next Post

குட்கா வழக்கு..! முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மீது வழக்குப்பதிவு? தமிழக அரசுக்கு சிபிஐ அவசர கடிதம்..!

Wed Jul 20 , 2022
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் உள்ளிட்டோரிடம் விசாரிக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், […]
குட்கா வழக்கு..! முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு? தமிழக அரசுக்கு சிபிஐ அவசர கடிதம்..!

You May Like