தற்போதைய காலகட்டத்தில் அனைவரது வீடுகளிலுமே கேஸ் அடுப்பு இருக்கும். ஆனால், அதை சுத்தம் செய்வது பலருக்கும் கடினமாக இருக்கும். குறிப்பாக, கேஸ் பர்னரை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆனால், நாங்கள் சொல்லும் டிப்ஸை பயன்படுத்தி, மிகவும் எளிதாக கேஸ் பர்னரை சுத்தம் செய்யலாம்.
அடிக்கடி கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்யும் நாம், அதன் பர்னரை மட்டும் விட்டுவிடுவோம். அதை ஏதோ ஒருநாள் சுத்தம் செய்யும்போது, மிகவும் கடினமாக இருக்கும். அவ்வளவு எளிதில் பர்னரை சுத்தம் செய்ய முடியாது. மேலும், பர்னரை சுத்தம் செய்தால் தான், அடுப்பும் நன்றாக எரியும். இதன் மூலம் கேஸை கூட சேமிக்கலாம். அதேபோல், பாத்திரங்களும் கரிப்பிடிக்காமல் இருக்கும்.
கேஸ் பர்னரை சுத்தம் செய்வது எப்படி..?
* முதலில் ஒரு பெரிய தட்டு எடுத்துக்கொண்டு, அதில் 2 கேஸ் பர்னர்களையும் போட்டு விடுங்கள்.
* அதில், தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, கேஸ் பர்னர் மூழ்கும் அளவுக்கு அந்த தட்டில் தண்ணீரை ஊற்றுங்கள்.
* இப்போது அதில், எலுமிச்சை சாற்றை பிழிந்து விடுங்கள். 2 பாக்கெட் ஈனோவும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* அதை அப்படியே விட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து, நம் கை வைத்துப் பார்த்தால், அதன் மீது இருக்கும் அழுக்குகள் நீங்கும்.
* பிறகு, நாம் பிழிந்த எலுமிச்சை தோலை எடுத்து பர்னரைத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
* பிறகு, பாத்திரம் தேய்க்கும் இரும்பு ஸ்க்ரப் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கழுவினால், கேஸ் பர்னர் புதுசு போல பளபளனு இருக்கும்.