fbpx

30 வயதிற்கு பிறகு கர்ப்பம் தரிப்பது கஷ்டமா? கவலைய விடுங்க இந்த டிப்ஸ்களை ஃபாலோவ் பண்ணுங்க போதும்…!

ஆரோக்கியமான உணவுகள்: ஆரோக்கியமான கருவை உருவாக்க 3 வேளை டயட்டிலும் ஏராளமான பழங்கள், சத்தான காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய சத்தான உணவுகளை மாறி மாறி இடம்பெற செய்ய வேண்டும். கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப கால ரத்த சோகையை  தவிர்க்க உதவுகிறது. பொதுவாக கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த தருணத்தில் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது ஒரு சிறந்த யோசனை.

மது புகையிலை, டீ காபி கூடாது: கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்கள் புகையிலை, ஆல்கஹால், அதிக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். டீ, காபி அதிகம் குடிக்க கூடாது. இந்த பழக்கமும் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைப்பதோடு ஓவலேஷனில் தாக்கத்தை ஏற்படுத்தி கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கும்.

வழக்கமான தாம்பத்ய உறவு: கர்ப்பம் தரிக்க அதிக முறை உடலுறவு கொள்வதும் முக்கியம். ஆய்வுகளின்படி குறைந்தது ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே உடலுறவை கடமை அல்லது வேலையாக கருதாமல் சுவாரசியமாக ஈடுபடுங்கள். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் கருவுறுதலை பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் கருப்பை நார்த்திசுக்கட்டி பிரச்சனைகள் மிக பொதுவானது. ஆண்களுக்கும் விந்து தரம் உள்ளிட்ட சில சிக்கல்கள் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

Kokila

Next Post

83 வயதில் இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் பாட்டி..!! சித்து விளையாட்டு காட்டும் கேரம் ராணி..!! வைரல் வீடியோ..!!

Thu Jan 12 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியின் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில், அவர் இளம் வயது கேரம் விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து அவர் விளையாடிய வீடியோவை அவரது பேரன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். புனேவின் ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற எனது […]

You May Like