fbpx

கருமுட்டையை உறைய வைப்பது நல்லதா? யாரெல்லாம் இதை பயன்படுத்தலாம்?

கருமுட்டைகளை நீண்ட நாட்களுக்கு உறைய வைத்து பாதுகாக்கும் முறை ஊசைட் ஃபிரீசிங்(oocyte Freezing) என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையை இன்று பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

எக் ஃப்ரீசிங் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் எந்த வயதில் இதனை செய்யலாம். எக் ஃப்ரீசிங் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டால் குழந்தை ஆரோக்கியமா பிறக்குமா? இந்த முறைக்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகர் தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை மெஹ்ரீன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கரு முட்டைகளை உறைய வைத்துள்ளேன்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கருமுட்டையை உறைய வைப்பது தொடர்பான டாப்பிக் அதிகளவில் பேசப்படுகிறது. மேலும் பலருக்கு இதுதொடர்பான பல சந்தேகங்களும் எழுந்துள்ளன.

சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எக் ஃபிரீசிங் முறை என்றால் என்ன? 20- 30 வயதிற்குட்பட்ட ஒரு பெண் பல்வேறு காரணங்களுக்காகவும், தங்களது வாழ்க்கை மற்றும் குழந்தை பேறு கருதியும் தன்னுடைய கருமுட்டையை வெளியே எடுத்து, உறைய வைத்து நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் இந்த முறையை கருமுட்டை உறைய வைத்தல் என அழைக்கப்படுகிறது.கருமுட்டைகளை நீண்ட நாட்களுக்கு உறைய வைத்து பாதுகாக்கும் இந்த முறை அறிவியலில் ஊசைட் ஃபிரீசிங் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு பின்பு உறைநிலையில் வைக்கப்படுகின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களினாலும் கூட ஏற்கெனவே சேகரித்து வைத்து தன்னுடைய கருமுட்டையை நவீன மருத்துவ அறிவியல் முறையில் கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

மேலும் சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யாரெல்லாம் கருமுட்டையை உறைய வைக்கலாம்? பெண்ணிற்கு புற்றுநோயோ அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கருமுட்டை உறைய வைக்கும் முறையில் முறையில் தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைக்கலாம். ஏனெனில் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பெண்ணின் கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்னையை உண்டாக்கலாம். எனவே புற்று நோய்க்கான சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த பெண்ணினுடைய கருப்பையில் இருந்து கருமுட்டையை எடுத்து, ஆய்வகத்தில் சேமித்து வைத்து விட வேண்டும். எதிர்காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த பின்பு அல்லது தாம் விரும்பும் நேரத்திலும் கருமுட்டையை கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

மேலும், கருத்தரிக்க விரும்பும் பெண் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற விரும்பினால், இந்த கருமுட்டை உறைய வைத்து சேமிக்கும் முறையைபயன்படுத்தி கொள்ளலாம்.தன்னுடைய ஆண் துணையிடம் சரியான அளவிலோ அல்லது தரமான உயிரணுக்கள் இல்லையென்றாலோ பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டையை சேமித்து வைத்துக்கொண்டு பிறகு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமுள்ள உயிரணுக்களை கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும். கருத்தரிக்க வைக்கப்பட்ட முட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையான முறையில் குழந்தை பெற வைக்க முடியும்.

சமூக காரணங்கள்: ஒரு சில பெண்களுக்கு மருத்துவ ரீதியான காரணங்கள் இருந்தாலும் சில பெண்களுக்கு வாழ்வியல் ரீதியாகவும் பிற சமூக காரணங்களுக்காகவும் கருமுட்டையை சேமித்து வைக்க விரும்புகின்றனர். பிஸ்னஸில் ஆர்வமுள்ள பெண் தன்னுடைய தொழிலில் முன்னேற்றம் அடைந்த பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பார். அதேபோல இளம் வயது வாழ்க்கை நன்றாக அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும் உண்டு. சினிமாவில் வாய்ப்புக்காகவும் கருமுட்டையை சேமித்து வைத்து பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும் நடிகைகளும் உண்டு. அவர்களின் கருப்பையில் இருந்து சேமித்து வைக்கப்படும் கருமுட்டை பின்வரும் காலங்களில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கருவூட்டல் செய்யப்பட்டு, அந்தப் பெண் விரும்பினால் மீண்டும் அவர்களுடைய கருப்பைக்குள்ளேயே செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும். இந்த கருமுட்டையை உறைய வைத்து, விரும்பும் நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் முதலில் உடல் தகுதிகள் தங்களுக்கு உள்ளனவா என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எக்ஃப்ரீசிங் செய்ய வழிமுறைகள் என்னென்ன? கருமுட்டையை உறைய வைத்து, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் முதலில் உடல் தகுதியை பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இந்த எக் ஃப்ரீசிங் முறையை செய்வதற்கு வயது ஒரு முக்கிய ஒன்றாக அமைகிறது. ஏனெனில் இளம் வயதில் தரமான கரு முட்டைகள் உருவாக்கம் செய்யப்படுகின்றன. மேலும் எக்ஃப்ரீசிங் முறையை பின்பற்ற விரும்பும் தம்பதிகள் IVF கிளினிக்கை அணுக வேண்டும். மேலும் அவர்கள் சொல்லும் அனைத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் எக்ஃப்ரீசிங் செய்வதற்கு தங்களுக்கு தகுதி உள்ளதா அதற்கான வயது உள்ளதா மேலும் கருமுட்டை வெளியே எடுத்து சேமிக்கும் அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்குமா போன்றவற்றை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.மேலும் ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் கவுன்சிலிங் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

குழந்தை ஆரோக்கியமாக இருக்காதா? கருமுட்டையை வெளியே எடுத்து அதன் பிறகு கருவூட்டப்பட்டு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்காது என்ற கருத்து நிலவி வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது .கருமுட்டையை உறைய வைக்கும் போது அவை சேதம் அடையலாம் . மேலும் அதன் தரத்தில் குறைபாடு ஏற்படலாம் என்பது போன்ற கருத்துக்களும் பரவி வருகின்றன. இவை அனைத்துமே பொய்யான தகவல்கள். இவை எதையும் நம்ப வேண்டாம். மேலும் இப்படி கருமுட்டையை உறைய வைத்து சேமிக்கும் முறையை பின்பற்றுவதற்கு, உங்களுக்கு திருமணம் ஆகி இருக்க வேண்டும் அல்லது பார்ட்னர் இருந்தால்தான் இந்த முறை பின்பற்ற முடியும் என்பது போன்ற விதிமுறைகள் எல்லாம் கிடையாது. நீங்கள் எப்போது விரும்பினாலும் உங்களது கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

Read More: ‘ஐஸ்கிரீமில் விஷம்..!’ குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. கணவர் கைது!

Baskar

Next Post

1 கோடி மதிப்புள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்தவர் கைது...!

Mon May 27 , 2024
சேலம் கஞ்சா வியாபாரி வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். சமீபத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 8 பேர் கொண்ட குழு அளித்த தகவலின் பேரில், தாள் சபீர் (32) என்பவரின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். சேலம் அம்மாபேட்டை ராமலிங்கம் தெருவில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். 500 மற்றும் 1000 ரூபாய் […]

You May Like