fbpx

’அம்மா இட்லி சாப்பிட்டது உண்மையா’..?? அம்பலப்படுத்திய ஆறுமுகசாமி ஆணையம்..!!

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில் வெளி உணவு வழங்காமல் மருத்துவமனை உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தக்காளி சாதம், இட்லி, வெண்பொங்கல், உள்ளிட்ட உணவுகளை தானாகவே வாய் வழியாக எடுத்துக் கொண்டதாக கிருஷ்ணபிரியா வாக்குமூலம் அளித்துள்ளார். மருத்துவமனை சமையல் பிரிவில் ஜெயலலிதாவின் சமையல்கார அம்மா தயாரித்த உணவையே அவர் உட்கொண்டதாகவும், சில சமயங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கேக் மற்றும் இனிப்புகளை ஜெயலலிதா எடுத்துக்கொண்டுள்ளார்.

’அம்மா இட்லி சாப்பிட்டது உண்மையா’..?? அம்பலப்படுத்திய ஆறுமுகசாமி ஆணையம்..!!

இரவு நேரத்தில் தயிர்சாதத்தில் மாதுளைகளை தூவியும், இரவில் மினி இட்லி அல்லது உப்புமாவை ஜெயலலிதா சாப்பிட்டுள்ளார். ஜெயலலிதா விரும்பிய உணவுகளை மட்டுமே வழங்கியதாகவும் மற்ற உணவுகளை அவர் மறுத்ததாகவும் மருத்துவர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நாட்களில் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மாறாக உணவு வழங்கப்பட்டதால், ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வேலை தேடிச் சென்ற மாணவியை நாசம் செய்த ஐஏஎஸ் அதிகாரி..!! கூட்டு பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார்..!!

Wed Oct 19 , 2022
பாலியல் பலாத்கார வழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேனை சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த ஜூலை மாதம் வரை தலைமைச் செயலராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திரா நரேன். அதன் பின்னர் அவர் டெல்லியில் உள்ள நிதி கழகத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தார். அவர் தலைமைச் […]
வேலை தேடிச் சென்ற மாணவியை நாசம் செய்த ஐஏஎஸ் அதிகாரி..!! கூட்டு பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார்..!!

You May Like